இலங்கை ஜனநாயக திருவிழா தொடங்கியது! தேர்தல் முடிவுகள் தொடர்பில் வெளியிடப்பட்ட தகவல்
கொழும்பு மற்றும் கம்பஹா உள்ளிட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
தொடங்கியது இலங்கை ஜனாதிபதி தேர்தல்
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்வு செய்யும் விதமாக, வாக்குப்பதிவு கொழும்பு மற்றும் கம்பஹா உள்ளிட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகியுள்ளது.
அதிகாலை 7 மணிக்கு தொடங்கியுள்ள இந்த தேர்தல் வாக்கு பதிவானது மாலை 4 மணிக்கு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் மொத்தம் 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இன்னும் சில மணி நேரங்களில் இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி யார் என்று அறிந்துக்கொள்ள முடியும்.
தேர்தல் முடிவுகள்
நாளை அதிகாலை முதல் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
38 வேட்பாளர்களின் பெறுபேறுகளும் ஊடகங்களுக்கு முதலில் வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் அதற்கு முன்னதாக தபால் மூல வாக்களிப்பு முடிவுகளை முதலில் வெளியிட முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகங்கள் போட்டித்தன்மைக்கு அமைய முன்கூட்டியே பெறுபேறுகளை வெளியிடக்கூடாது எனவும், ஆணைக்குழு வழங்கும் உத்தியோகபூர்வ முடிவுகளை மட்டுமே வெளியிடுமாறும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |