கைவிலங்குடன் ரணில் விக்ரமசிங்க! நீதிமன்ற காவலில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி! புகைப்படம்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை முன்னாள் ஜனாதிபதி கைது
இலங்கை முன்னாள் ஜனாதிபதி இன்று(22.08.2025) அந்நாட்டு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நீண்ட நேரம் நடந்த விசாரணைக்கு பிறகு அவரை வரும் 26ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து நீதிமன்றத்திற்கு வெளியே காத்திருந்த ரணில் ஆதரவாளர்கள் கடும் கூச்சலிட்டதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
Ranil Wickremesinghe’s supporters express their displeasure outside court after he was remanded. 🚨 pic.twitter.com/18SjKpEXFz
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) August 22, 2025
கைவிலங்குகளுடன் ரணில்!
நீதிமன்ற உத்தரவை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ரணில் விக்ரமசிங்க கைவிலங்குடன் சிறைச்சாலை பேருந்தில் அழைத்துச் செல்லப்படும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.