ஒன்று திரண்ட தமிழர்கள்! முல்லைத்தீவில் ஆரம்பமானது ஆர்ப்பாட்ட பேரணி
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு அருகில் ஆர்ப்பாட்ட பேரணி தொடங்கியுள்ளது.
தொடங்கிய ஆர்ப்பாட்ட பேரணி
இலங்கையில் முல்லைத்தீவில் உள்ள கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழிகள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் உலக தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதனை தொடர்ந்து தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரமும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை சுட்டி காண்பித்தது.
இந்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம், “சர்வதேசமே எமக்காக குரல் கொடு” என்ற தொனிப்பொருளில் முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு அருகில் ஆர்பாட்ட பேரணியை தொடங்கியுள்ளது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியானது, முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தொடங்கி மாங்குளம் முல்லைத்தீவு வழியாக மாவட்ட செயலகத்தில் நிறைவடைய உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்தில் நீதி கோரியும், சர்வதேச நிபுணத்துவம் மற்றும் கண்காணிப்பு வலியுறுத்தியும், குருந்தூர்மலை விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்தும் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |