சொந்த மண்ணிலே தடுமாறி வரும் இலங்கை! ஏமாற்றிய துடுப்பாட்ட வீரர்கள்: பந்து வீச்சில் மிரட்டிய இங்கிலாந்து
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 135 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, இங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று கல்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதன் படி நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி, முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
Sri Lanka make 135 in their first innings. #SLvsENG2021 pic.twitter.com/X523SOBkrx
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) January 14, 2021
இதையடுத்து இலங்கை அணிக்கு துவக்க வீரர்களாக, லகிரு திரிமண்ணே 4 ஓட்டங்களும், குசால் பெரேரா 20 ஓட்டங்களிலும் வெளியேற, அடுத்து வந்த குசல் மெண்டிஸ் டக் அவுட், ஆஞ்சிலே மேத்யூஸ் 27 ஓட்டங்கள், தலைவர் தினேஷ் சண்டிமால் 28 ஓட்டங்கள், நிரோஷன் டிக்வெல்லா 12, தசன் சனகா 23, வகிண்டு ஹசரங்கா 19 என அவுட்டாகியதால், இலங்கை அணி 135 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து அணியில், டாம் பெஸ் 5 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் ஆடி வருகிறது.