18 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த வெஸ்ட்இண்டீஸ்! கெத்து காட்டும் இலங்கை அணி... வெற்றியின் விளிம்பில்

srilankacricketteam testmatch westindiescricketteam
By Raju Nov 25, 2021 03:22 AM GMT
Report

இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியின் பிடியில் உள்ளது.

காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 386 ரன் குவித்தது. கேப்டன் கருணரத்னே அதிகபட்சமாக 147 ரன் (300 பந்து, 15 பவுண்டரி) விளாசினார்.

நிஸங்கா 56, டி சில்வா 61, சண்டிமால் 45 ரன் எடுத்தனர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 3ம் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்திருந்தது.

18 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த வெஸ்ட்இண்டீஸ்! கெத்து காட்டும் இலங்கை அணி... வெற்றியின் விளிம்பில் | Srilanka Vs Westindies 1St Test Match

நேற்று அந்த அணி 230 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஜோஷுவா 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை பந்துவீச்சில் பிரவீன் 4, ரமேஷ் 3, லக்மல், எம்புல்டெனியா, தனஞ்ஜெயா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 156 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. கருணரத்னே 83 ரன், ஏஞ்சலோ மேத்யூஸ் 69* ரன் விளாசினர்.


வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கார்ன்வால், வாரிகன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 348 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 11.4 ஓவரில் 18 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.

என்க்ருமா போனர் - ஜோஷுவா டா சில்வா ஜோடி 7வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராட, வெஸ்ட் இண்டீஸ் 4ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 52 ரன் எடுத்துள்ளது. போனர் 18 ரன், ஜோஷுவா 15 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

இலங்கை பந்துவீச்சில் எம்புல்டெனியா 2, ரமேஷ் 4 விக்கெட் கைப்பற்றினர். கை வசம் 4 விக்கெட் இருக்க, வெஸ்ட் இண்டீசுக்கு இன்னும் 296 ரன் தேவைப்படும் நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

5ஆம் நாள் ஆட்டமானது இலங்கை நேரப்படி காலை 9.45 மணிக்கு தொடங்குகிறது.


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US