இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் போட்டி! கேப்டன் கருணரத்னே அபார சதம்... பேட்டிங்கில் அசத்தும் இலங்கை வீரர்கள்
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை கேப்டன் திமுத் கருணரத்னே அபாரமாக விளையாடி சதமடித்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று கலே சர்வதேச மைதானத்தில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் திமுத் கருணரத்னேவும், பதும் நிஷங்காவும் களமிறங்கினர்.
Dimuth Karunaratne brings up his 13th Test ?!#SLvWI pic.twitter.com/cs4QNjyJLb
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) November 21, 2021
இரண்டு பேரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்த நிலையில் நிஷங்கா 56 ரன்களில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஒஷதா பெர்ணாண்டோ 3 ரன்களிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஆனால் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கருணரத்னே அபார சதமடித்தார். தற்போது வரை அவர் 230 பந்துகளில் 113 ரன்கள் எடுத்துள்ளார், மற்றொரு வீரர் தனஞ்செய டி சில்வா 19 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இலங்கை அணி தற்போது வரை 3 விக்கெட்கள் இழப்பிற்கு 209 ரன்களை எடுத்துள்ளது.