வங்கதேசத்தை தனி ஒருவனாக கதறவிட்ட சரித் அசலங்கா! இலங்கை அபார வெற்றி

SrilankaCricketTeam T20WorldCup BangladeshCricketTeam Super12
By Kaviarasan Oct 24, 2021 03:30 PM GMT
Report

உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 12 ஆட்டத்தில், வங்கதேச அணிக்கெதிரான போட்டியில், இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 12 ஆட்டத்தில், வங்கதேச அணிக்கெதிரான போட்டியில், இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 லீக் போட்டிகள் நேற்று முதல் துவங்கியது. இதில் இன்றைய முதல் ஆட்டத்தில், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின.

அதன் படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணிக்கு துவக்க வீரரான லிட்டன் தாஸ் 16 ஓட்டங்களில் லஹூரு குமாரா பந்துவீச்சிலும், அடுத்து வந்த ஷகிப் அல்ஹசன் சமைக்கா கருணரத்னே பந்து வீச்சில் 10 ஓட்டங்கள் எடுத்த நிலையில் போல்டாகியும் வெளியேறினார்.

வங்கதேசத்தை தனி ஒருவனாக கதறவிட்ட சரித் அசலங்கா! இலங்கை அபார வெற்றி | Srilanka Win Bangaldesh 5 Wickets

அதன் பின் முஸ்தபிசுர் ரஹூம் மற்றும் மற்றொரு துவக்க வீரர் மொகமது நயீம் இலங்கை அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர்.

இந்த ஜோடி அற்புதமாக விளையாடி வந்ததால், வங்கதேச அணியின் ரன் விகிதம் ஜெட் வேகத்தில் எகிறியது. குறிப்பாக முஸ்தபிசு ரஹூம் இலங்கை அணியின் பந்து வீச்சை நாலா புறமும் சிறப்பாக விளையாடி ரன் குவித்தார்.

மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மொகமது நயீம் 62 ஓட்டங்களில் அவுட் ஆக, இறுதியாக வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்கள் எடுத்தது.

வங்கதேசத்தை தனி ஒருவனாக கதறவிட்ட சரித் அசலங்கா! இலங்கை அபார வெற்றி | Srilanka Win Bangaldesh 5 Wickets

அந்தணியில் அதிகபட்சமாக மொகமது நயீமை(62), முஸ்தபிசுர் ரஹும் 57 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணியில் சமிக்கா கருண்ரத்னே, பினுரு பெர்ணாண்டோ மற்றும் லஹூரு குமரா தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து, 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு துவக்க வீரரான குசல் பெரேரா 1 ஓட்டத்தில் நடையை கட்ட, மூன்றாவது வீரராக களமிறங்கிய சரித் அசலங்கா இலங்கை அணியின் ரன் விகிதத்தை சீரான வேகத்தில் கொண்டு சென்றார்.

இதற்கிடையில் மற்றொரு துவக்க வீரர் பதும் நிஷன்கா 24 ஓட்டங்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து வந்த அவிஷ்கா பெர்ணாண்டோ டக் அவுட், வஹிண்டு ஹசரங்கா 6 ஓட்டங்களில் அடுத்தடுத்து வெளியேறியதால், மீண்டும் ஆட்டம் வங்கதேச பக்கம் திரும்பியது.

வங்கதேசத்தை தனி ஒருவனாக கதறவிட்ட சரித் அசலங்கா! இலங்கை அபார வெற்றி | Srilanka Win Bangaldesh 5 Wickets

ஆனால், அது நான் இருக்கும் வரை நடக்காது என்பது போல் சரித் அசலங்கா, பனுகா ராகபக்‌ஷவுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த ஜோடி வங்கதேச அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கியது. இதனால் இலங்கை அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.  

ஒரு கட்டத்தில் இலங்கை அணி தோல்வி அடைந்துவிடும் என்ற போது, தனி ஒருவனாக அற்புதமாக விளையாடி வெற்றிக்கு முக்கிய காரணமான சரித் அசலங்காவை அந்நாட்டு ரசிகர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். அவர் மட்டுமின்றி  பனுகா ராகபக்‌ஷவும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து 31 பந்தில் 53 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US