மீண்டும் இலங்கை கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி! பேட்டிங்கில் தெறிக்கவிட்ட 2 வீரர்கள்... ரசிகர்கள் மகிழ்ச்சி
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் பப்புவா நியூ கினியா அணிக்கெதிரான பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது.
ஓமானில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை பெற்றது. இலங்கை அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பெத்தும் நிஸ்ஸங்க 76 ரன்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 61 ரன்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பப்புவா நியூ கினியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளுக்கு 123 ரன்களை பெற்று 39 ரன்களில் தோல்வியடைந்தது. பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ICC #T20WorldCup | Warm-up ?? vs ??
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) October 14, 2021
Sri Lanka beat Papua New Guinea by 39 runs in their warm-up fixture in Abu Dhabi.
SL - 162/5 (20) vs PNG - 123/7 (20)
W Hasaranga 4-0-16-2
D Chameera 4-1-20-2
D Shanaka 1-0-5-1
C Karunaratne 4-0-30-1
M Theekshana 4-0-34-1
L Kumara 3-0-15-0 pic.twitter.com/Cz99VWO5ef
ஏற்கனவே ஓமான் அணியை இலங்கை வீழ்த்திய நிலையில் இது அந்த அணிக்கு அடுத்த வெற்றியாகும் இந்த தொடர் வெற்றிகள் மூலம் உலகக்கோப்பைகிரிக்கெட் தகுதிச் சுற்றில் இலங்கை கிரிக்கெட் அணியினர் தன்னம்பிக்கையுடன் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் இந்த வெற்றிகள் கொடுத்துள்ளது.