தோல்விக்கு பழிதீர்க்குமா இலங்கை? இந்தியாவுடனான 2வது போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு... அணியில் முக்கிய மாற்றம்
இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுபயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையில் முதலில் ஒருநாள் தொடர் நடந்து வரும் நிலையில் முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து இரண்டாவது போட்டி இன்று நடக்கிறது. சற்று முன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் அதில் வெற்றி பெற்று இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
?? India: Unchanged
— CricTracker (@Cricketracker) July 20, 2021
??Sri Lanka: Kasun Rajitha comes in for Isuru Udana
Who's winning the #SLvIND second ODI? ? pic.twitter.com/w7X1IwHNd1
இப்போட்டியில் இந்திய அணியில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை, கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களே களமிறங்குகின்றனர்.
ஆனால் இலங்கை அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இசுரு உடனாவுக்கு பதிலாக கசுன் ரஞ்சிதா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்த போட்டியில் இலங்கை அணி பழிதீர்க்குமா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.