இரவில் தூங்குவது கடினம்! சத்தமா இருக்கும்.. பிரித்தானியாவில் தற்கொலைகுண்டுதாரி வசித்த வீட்டில் தங்கிய இலங்கையர் சொன்ன முக்கிய தகவல்
பயங்கரவாத தாக்குதலாக லிவர்பூல் வெடிகுண்டு சம்பவம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த Emad Jamil Al Swealmeen தங்கியிருந்த அதே வீட்டில் தங்கியிருந்த இலங்கையர் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
Emad Jamil Al Swealmeen (32) என்னும் நபர், பிரித்தானியாவின் லிவர்பூல் மகளிர் மருத்துவமனை அருகே ஒரு டாக்சியில் குண்டு வெடித்து உயிரிழந்தார். ஜோர்டன் நாட்டை சேர்ந்தவராக Emad கருதப்படுகிறார். இது தற்கொலை தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் MI5 உதவி பெறும் பொலிசார் விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதே சமயம் என்ன நடந்தது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு 'பல வாரங்கள்' ஆகலாம் என்றும் கூறியிருக்கின்றனர்.
இந்த நிலையில் புகலிடக்கோரிக்கையாளர்கள் பலரும் தங்கியிருந்த வீட்டில் தான் Emad தங்கியிருந்தார். ஒரு வருடத்துக்கு மேலாக அங்கு அவர் வசித்து வந்திருக்கிறார். புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு வீட்டுவசதி வழங்கும் செர்கோவால் இந்த கட்டிடம் நிர்வகிக்கப்பட்டது, மேலும் மூன்று படுக்கையறையிலிருந்து நான்கு படுக்கையறைகள் கொண்டதாக இந்த வீடுகள் மாற்றப்பட்டது.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த வீட்டில் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கியிருக்கின்றனர். அந்த இடமானது மிகுந்த சப்தம் நிறைந்த, அதிகம் பேர் கொண்ட நெரிசல் நிறைந்த இடமாகவே இருந்திருக்கிறது.
இந்த வீட்டில் நீண்ட காலம் வசித்துள்ள இலங்கையை சேர்ந்த புகலிடகோரிக்கையாளர் டி.ஜே ஜெயவீரா கூறுகையில், வீட்டின் படுக்கையறையின் சுவர்கள் மெல்லிய ஒட்டு பலகையால் செய்யப்பட்டுள்ளது, மேலும் சத்தம் காரணமாக இரவில் தூங்குவது மிகவும் கடினம்.
அந்த இடம் மிகவும் சத்தமாகவும், அசுத்தமாகவும் எப்போதும் இருக்கும். என்னைப் போன்று நிறைய புகலிடக் கோரிக்கையாளர்கள் வந்து செல்வார்கள் ஆனால் நான் மிக நீண்ட காலம் அங்கேயே இருந்தேன்.
வீட்டிலுள்ள வாழ்க்கை நிலைமைகள் குறித்து புகார் தெரிவித்து மேலாளருக்கு மின்னஞ்சலை சில தடவை அனுப்பியுள்ளேன் என கூறியுள்ளார்.