உள்ளாடைக்குள் 3 மலைபாம்புகளை வைத்து கடத்திய இலங்கையர் கைது
உள்ளாடைக்குள் வைத்து பாம்புகளை கடத்தியதில் இலங்கை நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாம்பு கடத்தல்
இலங்கையை சேர்ந்த ஷெஹான் என அடையாளம் காணப்பட்ட நபர், தாய் ஏர்வேஸ் விமானம் மூலம், தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
விலங்கு கடத்தல் பின்னணி கொண்ட அவரது வருகை குறித்து, விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து, விமான நிலையத்தில் அவரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், அவரது உடமைகளை எக்ஸ்ரே ஸ்கேன் செய்தனர். ஆனால் எந்த சட்டவிரோத பொருட்களும் கிடைக்கவில்லை.
அதன் பின்னர், அவரது உடலை சோதனையிட்டதில், அவரது உள்ளாடைக்குள் 3 பந்து மலைப்பாம்புகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கூடுதல் விசாரணைக்காக, காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.
அனுமதியின்றி வனவிலங்குகளை ஏற்றுமதி செய்ய முயற்சித்தால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 1 மில்லியன் பாட் (இந்திய மதிப்பில் ரூ.26 லட்சம்) வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
முன்னதாக 2024 ஆம் ஆண்டு, இலங்கையின் கொழும்பில் ஓநாய்கள், முள்ளம்பன்றிகள் மற்றும் உடும்புகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளை கடத்திய வழக்கில் ஏற்கனவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |