ரூ.1.83 கோடி மதிப்புள்ள தங்க பசை கடத்திய இலங்கையர் விமான நிலையத்தில் கைது
srilankan national arrested at mumbai airport for gold smuggling: ரூ.1.83 கோடி மதிப்புள்ள தங்க பசை கடத்திய இலங்கையர் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்க பசை கடத்திய இலங்கையர் கைது
மும்பை சர்வதேச விமான நிலையத்தில், உளவுத்தகவலின் அடிப்படையில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) சோதனை நடத்தியது.

புதன்கிழமை நடைபெற்ற இந்த சோதனையில், போர்டிங் கேட் எண் 65-க்கு அருகிலுள்ள லிஃப்டில் விமான நிறுவன ஊழியர் ஒருவரிடம் தங்கப் பசை உள்ள 3 நீள்வட்ட வடிவ பொட்டலத்தைக் கொடுத்த இலங்கை பயணி ஒருவரை CISF அலுவலர்கள் இடைமறித்தனர்.
இருவரும் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக சுங்கத்துறை மற்றும் விமான நிலைய புலனாய்வுப் பிரிவிடம் (AIU) ஒப்படைக்கப்பட்டனர்.
𝐂𝐈𝐒𝐅 𝐃𝐄𝐓𝐄𝐂𝐓𝐒 𝐒𝐔𝐒𝐏𝐄𝐂𝐓𝐄𝐃 𝐆𝐎𝐋𝐃 𝐒𝐌𝐔𝐆𝐆𝐋𝐈𝐍𝐆 𝐀𝐓 𝐌𝐔𝐌𝐁𝐀𝐈 𝐀𝐈𝐑𝐏𝐎𝐑𝐓 Vigilant CISF personnel at Mumbai Airport detected a suspected gold smuggling attempt involving approximately 1,490 grams of gold paste (24-karat gold), valued at around ₹1.83 crore. Acting on specific intelligence input, CISF personnel intercepted an international transit passenger, a Sri Lankan national, who allegedly handed over a packet containing three oval-shaped substances suspected to be gold paste to an airline staff member inside a lift near Boarding Gate No. 65. Both individuals, along with the recovered material, were handed over to Customs/AIU for further investigation and necessary legal action. #MumbaiAirport #AirportSecurity #CISF #Vigilance #GoldSmuggling @HMOIndia @CISFHQrs @CSMIA_Official @PIBMumbai
— APS - CISF (@CISFAirport) October 22, 2026
மீட்கப்பட்ட தங்கக் பசை சுமார் 1,490 கிராம் எடையுடையதாகவும், அதில் 24 காரட் தங்கத்தின் 3 துண்டுகள் அடங்கியிருந்ததாகவும், அதன் மதிப்பிடப்பட்ட மதிப்பு ரூ. 1.83 கோடி என்றும் கண்டறியப்பட்டது.