ஈழத்தமிழர்களை வைத்து சீமான் பணம் சம்பாதிக்கிறார்! இலங்கை தமிழர் பேசிய ஆடியோவை வெளியிட்ட வீரலட்சுமி
இலங்கை தமிழர் ஒருவர் சீமானுக்கு பணம் கொடுத்து ஏமாந்ததாக பேசிய ஆடியோ ஒன்றை வீரலட்சுமி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்த விவகாரத்தில், தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி குரல் கொடுத்தார்.
அத்துடன் சீமானுக்கு எதிராக மோதல் போக்கை அவர் கடைபிடித்து வருகிறார். இந்த நிலையில் சீமானுக்கு எதிராக ஆடியோ ஒன்றை வெளியிட்டு வீரலட்சுமி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'ஈழத்தமிழர்களின் துயரங்களை துடைக்க தன்னுடைய சொந்த பணத்தில் செலவு செய்து, போராட்டம் செய்து, சிறைக்கு சென்று, தியாக உணர்வோடு பல லட்சம் இளைஞர்களும், இளம் பெண்களும் தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
ஆனால், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களோ, ஈழத்தமிழர்களின் துயரங்களையும், வேதனைகளையும், லட்சியங்களையும் வியாபார நோக்கத்திற்காக ஈழத்தமிழர்களை வைத்து பணம் சம்பாதிக்கிறார்' என குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் அதற்கான சான்று இதோ என இலங்கை தமிழர் ஒருவர் பேசியதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பேசும் நபர், 'நான் இலங்கை தமிழன். இலங்கையில் இருந்து தற்போது சவுதியில் உள்ளேன். நான் முன்னே சீமானுக்கு காசு போட்ட documents அவ்வளவும் என்கிட்ட இருக்கிறது. எனக்கு தமிழ்நாட்டுல குடியுரிமை வாங்கி தாரேன் என்று சொன்னார். எங்க குடும்பத்துல 8 பேர் இருக்கோம். போராட்டத்தில் 2 அண்ணா இறந்து போய்ட்டாங்க.
நான் மட்டும் தான் இங்கே இருக்கிறேன், ரெண்டு தங்கையும் இருக்காங்க நாட்டுல. எல்லாருக்கும் தமிழ்நாட்டுல குடியுரிமை வாங்கி தாரேன் வாங்க என்று சொல்லி நிறைய காசு வங்கியிருக்கிறாங்க. ஒரு ரெஸ்பான்ஸும் இல்ல. ஒரு 12 வருஷமாச்சு. ஆர்.கே.நகர் தேர்தலில் எவ்வளவோ காசு செலவழிச்சிருக்கேன்' என பேசியுள்ளார்.
வீரலட்சுமி ஆதாரம் என்று வெளியிட்டுள்ள இந்த ஆடியோ மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |