இந்திய மீனவர்களுக்கு 2 வருட சிறை தண்டனை - இலங்கை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
எல்லைத்தாண்டிய 11 இந்திய மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை
எல்லை தாண்டி மீன் பிடித்தமையால், புதுக்கோட்டையை சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட 15 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன்போது அதில் 11 மீனவர்களுக்கு 2 ஆண்டுக்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2 வருடனம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட 11 மீனவர்கள் இரண்டாவது முறையாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதால் சிறை தண்டனை விதிப்பதாகவும் புதிதாக கைதான 4 மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்வதாகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |