எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு டீ, பாண் பரிமாறும் இலங்கை கிரிக்கெட் வீரர்!

Cricket Sri Lanka Cricket Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Ragavan Jun 19, 2022 02:11 PM GMT
Report

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒருவர் டீ, பாண் பரிமாறும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன.

இலங்கையில் கடுமையான உணவு, எரிபொருள், மருந்துகள் பற்றாக்குறையை எதிர்த்துப் போராடி வரும் நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ரொசான் மகாநாம (Roshan Mahanama), கொழும்பில் உள்ள எரிபொருள் நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருப்பவர்களுக்கு தேநீர் மற்றும் பாண் பரிமாறும் படங்களைப் பகிர்ந்துள்ளார்.

இலங்கை சுதந்திரத்திற்குப் பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அந்நாட்டில் டொலர்களே இல்லாத நிலை உள்ளது.

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு டீ, பாண் பரிமாறும் இலங்கை கிரிக்கெட் வீரர்! | Srilankan Cricketer Tea Buns For Petrol Queues

இந்நிலையில், பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கு பொது மக்களுக்கு முன்னால கிரிக்கெட் வீரர் உதவி செய்கிறார்.

அதன் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்த அவர், “வார்ட் பிளேஸ் மற்றும் விஜேராம மாவத்தவைச் சுற்றியுள்ள பெட்ரோல் வாங்க வரிசையில் உள்ள மக்களுக்கு இன்று மாலை சமூக உணவுப் பகிர்வின் குழுவினருடன் நாங்கள் தேநீர் மற்றும் பாண்களை வழங்கினோம்.

வரிசைகள் நாளுக்கு நாள் நீளமாகி வருகின்றன, மேலும் வரிசையில் இருப்பவர்களுக்கு பல உடல்நல ஆபத்துகள் இருக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு டீ, பாண் பரிமாறும் இலங்கை கிரிக்கெட் வீரர்! | Srilankan Cricketer Tea Buns For Petrol Queues

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய பொலிஸாரையும் படையினரையும் இலங்கை அனுப்பியுள்ளது.

மேலும், போக்குவரத்தை குறைப்பதற்கும், எரிபொருளின் கையிருப்புகளை பாதுகாப்பதற்கும் அரசாங்கம் இரண்டு வாரங்களுக்கு அரசு நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளை மூடுவதாக அறிவித்தது.

"தயவுசெய்து, எரிபொருள் வரிசைகளில் ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ளுங்கள். போதுமான பானம் மற்றும் உணவைக் கொண்டு வாருங்கள், உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், உங்களுக்கு அருகில் உள்ள நபரைத் தொடர்புகொண்டு ஆதரவைக் கேளுங்கள் அல்லது 1990-க்கு அழைக்கவும். இந்த கடினமான காலங்களில், நாம் ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ள வேண்டும்" என்று ரொசான் மகாநாம வலியுறுத்தினார். 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US