இலங்கையின் பிரபலமான லெவரியா.., இலகுவாக செய்வது எப்படி?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த லெவரியா விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் இலங்கையில் லெவரியா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி மாவு- 2 கப்
- தேங்காய் துருவல்- 1 கப்
- வெல்லம்- ½ கப்
- நெய்- தேவையான அளவு
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- உப்பு- 1 சிட்டிகை
செய்முறை
முதலில் ஒரு வாணலில் சிறிதளவு நெய் சேர்த்து அதில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.
பின் அதில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி கெட்டியாய் வந்ததும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு மற்றும் நெய் சேர்த்து தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து வாழை இலை எடுத்து அதில் நெய் தடவி பிணைந்த மாவை இடியாப்பம் பிழியவும்.
அதன் மீது தேங்காய் கலவையை வைத்து மூடி இட்லி குக்கரில் 10-15 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுத்தால் சுவையான லெவரியா ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |