இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்கள் அணியும், இலங்கை தேசிய அணியும் மோதும் போட்டி குறித்து வெளியான முக்கிய தகவல்
இலங்கை ஜாம்பவான்கள் அணியும், இலங்கை தேசிய அணியும் மோதும் கிரிக்கெட் போட்டி தொடர்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
இப்போட்டியை வரும் ஏப்ரல் மாதம் நடத்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் முன் மொழிந்துள்ளார். அதாவது தற்போது இலங்கை தேசிய அணி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடி வரும் நிலையில் அதற்கு பின்னர் இப்போட்டியை கொழும்பில் உள்ள பிரேமதாச மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
50 சதவீத பார்வையாளர்களுடன் நடக்கவுள்ள இப்போட்டியில் கிடைக்கும் நிதியானது கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும்.
ஜாம்பவான்கள் அணியின் தலைவராக யார் இருப்பார் என முடிவு செய்யப்படாத நிலையில் தேசிய அணியை தசுன் ஷனகா வழிநடத்தவுள்ளார்.
இப்போட்டி தொடர்பான இறுதி தீர்மானம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.