மஹேலா ஜெயவர்தனே உள்ளிட்ட தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகல்
இலங்கையில் நெருக்கடியான சூழ்நிலை நிலவும் நிலையில் மஹேலா ஜெயவர்தனே தலைவராக உள்ள இலங்கை நாட்டின் தேசிய விளையாட்டு கவுன்சிலில் உள்ள உறுப்பினர்கள் தங்களது பதவியிலிருந்து விலகியுள்ளனர்.
இலங்கையில் விளையாட்டுக் கொள்கை சார்ந்த விவகாரங்களில் அத்துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக கடந்த 2020 ஆகஸ்ட்டில் தேசிய விளையாட்டு கவுன்சில் அமைக்கப்பட்டது.
இந்த கவுன்சிலின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் மஹேலா ஜெயவர்தனே நியமிக்கப்பட்டார். இதனிடையில் இலங்கை நாட்டின் தற்போதைய சிக்கலுக்கு யார் காரணம். இதனை எப்படி சரி செய்வது என்பது தொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை சொல்லி இருந்தார் ஜெயவர்த்தனே.
இந்நிலையில் ஜெயவர்த்தனே உட்பட உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தற்போது இந்தியாவில் உள்ள ஜெயவர்த்தனே, ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் இலங்கை அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.