லண்டனில் இலங்கையர் கொல்லப்பட்ட விவகாரம்! வெளியான முக்கிய தகவல்
லண்டனில் இலங்கையர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 36 வயது மதிக்கத்தக்க நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் East End-ல் Kankanamalage என்பவர் பல ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். 50 வயது மதிக்கத்தக்க இவர் இலங்கையில் இருந்து 12 ஆண்டுகளுக்கு முன்பு பிரித்தானியா வந்துள்ளார்.
ஓரினச்சேர்க்கையாளரான இவர் கடந்த ஆண்டு(2021) ஆகஸ்ட் மாதம் 16-ஆம் திகதி Tower Hamlets Cemetery(கல்லறை) பூங்காவில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அதன் பின் பொலிசார் அவரது உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்த போது, பிரேதபரிசோதனை அறிக்கையில், இவர் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இந்த கொலை சம்பத்தால் LGBT+ சமூகத்தினரிடையே அச்சம் ஏற்பட்டதால், இது மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கொலையாளியை அடையாளம் காணும் எவருக்கும், 20,000 பவுண்ட்(இலங்கை மதிப்பில் 54,46,895 ரூபாய்) சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ஆம் திகதி 36 வயது மதிக்கத்தக்க Eric Feld என்பவரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதன் பின் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை( 2022) Eric Feld-மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இவர் வரும் சனிக்கிழமை Thames Magistrates நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.
Kankanamalage குறித்து அவருடைய நெருங்கிய நண்பர் கூறுகையில், அவர் மிகவும் கனிவான அருமையான நபர், ஒரு லட்சியத்துடன் வாழ்ந்து வந்தார்.
ஆனால், என்ன நடந்தது என்பது தெரியவில்லை, இருப்பினும் இந்த மோசமான செயலில் ஈடுபட்ட நபருக்கு நீதி முன்பு தண்டிக்கப்படுவார் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017