வெளிநாட்டு வீரர்களால்...ஐபிஎல் தொடரில் இலங்கை வீரர்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்: பயன்படுத்தி கொள்வார்களா?
இந்தியாவில் நடத்தப்பட்ட ஐபிஎல் தொடர், ஒத்தி வைக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள நிலையில், இந்த தொடரில் விளையாட இலங்கை வீரர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தாண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா நெருக்கடி காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
ஆனால், அக்டோபர் மாதம் உலகக்கோப்பை டி20 தொடர், அதன் பின் தேசிய அணிகளுக்கு இருக்கும் தொடர்கள் காரணமாக, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற அணியில் இருக்கும் வீரர்கள் விளையாடுவது சந்தேகம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்த முறை ஐபிஎல் தொடர் வெளிநாட்டு வீரர்கள் அதிகம் இல்லாமல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூலை மாதம் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 போட்டி தொடர்கள் நடைபெறுகின்றன.
இந்த தொடரில் இலங்கை வீரர்கள் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர்கள் ஐபிஎல் தொடரில் மாற்று வீரராக தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏனெனில் வெளிநாட்டு வீரர்கள் பலர் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போனால் அணிகளில் வெளிநாட்டு வீரர்களுக்கான வெற்றிடம் இருக்கும்.
அந்த இடங்களில் தற்போது இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்படும் இலங்கை வீரர்கள் நிச்சயம் இடம் பிடித்து விளையாட முடியும். இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் இலங்கை வீரர்கள் விளையாடுவதற்கு ஒரு அருமையான வாய்ப்பு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.