ஐபிஎல் ஏலத்தில் பெரிய தொகைக்கு விலை போன இலங்கை வீரர் வனிந்துவுக்கு குவியும் வாழ்த்து!
ஐபிஎல் ஏலத்தில் பெரிய தொகைக்கு வாங்கப்பட்டுள்ள இலங்கை வீரர் வனிந்து ஹசரங்காவுக்கு சக இலங்கை வீரர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற முதல்நாள் ஐபிஎல் மெகா ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான வனிந்து ஹசரங்கா 10.75 கோடி ரூபாவுக்கு ராயக் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் நம்பிக்கைகுரிய வீரராக வலம் வரும் வனிந்து ஹசரங்கா பந்துவீச்சு, துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு என சகல துறைகளிலும் ஆற்றல்களை வெளிப்படுத்தி வருகிறார்.
Well deserved wanindu @Wanindu49 ? just enjoy your game.. all the best ? #IPL2022MegaAuction pic.twitter.com/XjvhE11w5y
— dinesh chandimal (@chandi_17) February 12, 2022
இதையடுத்து ஹசரங்காவுக்கு இலங்கை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தினேஷ் சண்டிமால் பதிவில், இதற்கு நீங்கள் தகுதியுடையவர் ஹசரங்கா, உங்கள் விளையாட்டை ரசியுங்கள்.. ஆல் தி பெஸ்ட் என பதிவிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வர்ணனையாளர் ரோஷன் அபேசிங்கேவின் பதிவில், ஒரு இலங்கையர் என்ற முறையில் ஹசரங்கா ஐ.பி.எல்-க்கு தேர்வு செய்யப்படுவதைப் பார்ப்பது நம் அனைவருக்கும் பெருமையான தருணம் என பதிவிட்டுள்ளார்.
இப்படி பலரும் ஹசரங்காவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
As a Sri Lankan it is a proud moment for all of us to see @Wanindu49 being picked for the IPL. At a time when no Sri Lankan was considered worthy, Hasaranga has flown the flag high and not just given fresh hope and confidence to many, but proved that Sri Lankans can.
— Roshan Abeysinghe (@RoshanCricket) February 12, 2022