பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது இலங்கை: ஐ.நாவில் அநுர குமாரதிசாநாயக்க அறிவிப்பு
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இலங்கை அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்திற்கு இலங்கை அங்கீகாரம்
பாலஸ்தீனம் என்ற தனி அரசுக்கான உரிமையை அங்கீகரிப்பதாக இலங்கை ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க அறிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80 வது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க இந்த முடிவை அறிவித்துள்ளார்.
அதில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களின் நியாயமான பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான தேவைகளை அங்கீகரிப்பது அவசியம் என்றும் அநுர குமாரதிசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் 1967 ஆம் ஆண்டு எல்லை வரையறையை அடிப்படையாக கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் படி ஒரு நியாயமான மற்றும் நீடித்த தீர்வுக்காக நாம் ஒன்றுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
போர்களை நிராகரிக்க வேண்டும்
தொடர்ந்து பேசிய அநுர, உலகம் முழுவதும் நடைபெறும் அர்த்தமற்ற போரில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய முக்கியமான நேரத்தை அடைந்துவிட்டோம்.
நீங்கள் எந்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அனைத்து போரையும் நிராகரிக்க என்னுடன் சேருவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் எனவும் அநுர குமாரதிசாநாயக்க பேசியுள்ளார்.
அத்துடன் உலகில் உள்ள எந்தவொரு நாடும் போரை விரும்பவில்லை, போர் எங்கு நடந்தாலும் அது ஒரு சோகம், இப்போது கூட அந்த சோகத்தின் வலி உலகம் முழுவதும் உணரப்படுகிறது என்று அநுர குமாரதிசாநாயக்க தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |