சஜித், அநுரவிடையே தீவிரமடையும் போட்டி - 2ம் கட்டத்திற்கு தயாராகும் தேர்தல் களம்
சஜித், அநுரவிடையே போட்டியானது அதிகரித்துள்ள நிலையில் தற்போது 2ம் கட்டத்திற்கு தயாராகும் தேர்தல் களம் தயாராகி உள்ளது. இதன் இறுதி முடிவுகள் இன்று மாலைக்குள் வழங்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல்
தற்போது சஜித், அநுரவிடையே போட்டி தீவிரமடைந்து இரண்டாம் கட்டத்திற்கு தேர்தல் களம் முன்னனேறி உள்ளது. இதில் ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளையும் மேலும் ஒரு வாக்குகளையும் அதிகமாக பெற்றிருக்க வேண்டும்.
ஒரு வேட்பாளர் அந்த சதவீத வாக்குகளைப் பெறவில்லை என்றால், விருப்பு வாக்குகளை எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு அதிகாரிகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
2ம் கட்டத்திற்கு தயாராகும் தேர்தல் களம் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி யார் என்பது தொடர்பில் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5,200ஐ தாண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |