10 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய வானொலி வெடிப்பை கண்டுபிடிக்க உதவிய இலங்கை விஞ்ஞானி
sri lankan scientist contribute to found oldest FRB: 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய வேகமான வானொலி வெடிப்பை கண்டுபிடித்த குழுவில் இலங்கையை சேர்ந்த தேமியா நாணயக்கார பங்காற்றியுள்ளார்.
10 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய FRB
சிட்னி பல்கலைக்கழக வானியற்பியலாளர் டாக்டர் மனிஷா காலேப் தலைமையிலான ஆய்வுக் குழு, FRB 20240304B எனப் பெயரிடப்பட்ட வேகமான வானொலி வெடிப்பை(Fast Radio Burst) கண்டறிந்தது.

இந்த ஆய்வின் இணை ஆசிரியராக இலங்கையை சேர்ந்த தேமியா நாணயக்கார (Themiya Nanayakkara) முக்கிய பங்காற்றியுள்ளார்.
மீர்ட்ராப் (MeerTRAP) எனப்படும் அமைப்பைப் பயன்படுத்தி, தென்னாப்பிரிக்காவில் உள்ள மீர்கேட் (MeerKAT) வானொலி தொலைநோக்கி மூலம் இந்த வெடிப்பை இந்த குழு கண்டறிந்துள்ளது.
இந்த வெடிப்பு மிக நீண்ட தூரத்திலிருந்து வந்திருக்கலாம் என்பதை உணர்ந்த அந்த குழு, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை ( JWST) மூலமாக 10.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை கண்டறிந்துள்ளனர்.

இதுவே, இதுவரை பதிவுசெய்யப்பட்டதிலேயே மிகப் பழமையான வேகமான வானொலி வெடிப்பு ஆகும்.
பிரபஞ்சத்திற்கு சுமார் 3 பில்லியன் ஆண்டுகள் பழமையான காலத்தில் அந்த சமிக்ஞை உருவானது.
வேகமான வானொலி அலை வெடிப்புகள் என்பவை, சில மில்லி விநாடிகள் மட்டுமே நீடிக்கும் மிகவும் சக்திவாய்ந்த ரேடியோ அலைகளின் திடீர் ஒளிர்வுகள் ஆகும்.
சமிக்சையை வெளியிட்ட அந்த விண்மீன் மண்டலம் எதிர்பார்த்ததை விட சிறியதாகவும், உலோக வளம் குறைந்ததாகவும் மற்றும் அதிக எண்ணிக்கையிலான நட்சத்திரங்களை உருவாக்கி வருவதாகவும் தெரிய வந்தது.
இந்த குணாதிசயங்கள், FRB தோன்றும் சூழல்களைப் பற்றிய புதிய தடயங்களை அளித்து, அந்த மர்மமான நிகழ்வுகளைப் பற்றி மேலும் தகவல்களை வழங்கக்கூடும்.
FRB 20240304B ஒரு தொலைதூர விண்மீன் மண்டலத்தைப் பற்றி தெரிவிப்பதோடு இல்லாமல், அண்டக் காலம் முழுவதும் மின்சாரம் ஏற்றப்பட்ட பருப்பொருள் பிரபஞ்சம் முழுவதும் எவ்வாறு பரவியுள்ளது, அண்டம் எவ்வளவு காந்தமயமாக்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்வதற்கு புதிய பாதையை திறந்துள்ளது.