எங்களை விட்ருங்க ப்ளீஸ்! நடிகர்களை இலங்கை தமிழ் பேச வைக்க முயற்சிக்காதீங்க... இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் ஈழப்பெண் கோரிக்கை
ஈழத்தமிழர்கள் பிரச்சினை குறித்து படமாக்க வேண்டாம், எங்களை விட்டு விடுங்கள் ப்ளீஸ் என இலங்கை தமிழ்ப்பெண் ஒருவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் இளம் இயக்குனராக இருப்பவர் கார்த்திக் சுப்புராஜ். இந்நிலையில் நவரசா என்ற ஆந்தாலஜியில் மொத்தம் 9 இயக்குநர்கள் தங்களுக்கு தெரிந்த மொத்த வித்தையும் இறக்கி 9 குறும்படங்களை உருவாக்கி உள்ளனர்.
அதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கெளதம் மேனன், பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான பீஸ் - சாந்தி கதை இலங்கை தமிழர்கள் பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருந்தது.
Dear Karthik Subbaraj,
— Kambali Poochi Thangachi (@Shevangi29) August 7, 2021
Engala vitrunga pls. No need to make movies about us. It’s ok.
Mukkiyama don’t try to make people speak in Sri Lankan tamil. Pls.
Love,
A Sri Lankan tamil 💕
ஆனால் அவரின் படத்தின் கருத்து எடுபடாமல் போன நிலையில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே தனுஷ் நடிப்பில் ஓடிடியில் வெளியான ஜகமே தந்திரம் படத்திலும் இதே போல ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து சர்ச்சை கருத்தை கூறியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.
மறுபடியும் நவரசாவிலும் இது போன்ற விமர்சனத்தை கார்த்திக் சுப்புராஜ் சந்தித்துள்ளார். இதையடுத்து இனிமேல் இலங்கை தமிழர்கள் பிரச்சனையை யாரும் சினிமா எடுத்து காசு பார்க்க வேண்டாம் என்றும் கண்டன பதிவுகளும் அதிகம் கண்ணில் தென்படுகின்றன.
இது தொடர்பாக இலங்கை தமிழ்ப்பெண் ஒருவரின் டுவிட்டர் பதிவில், டியர் கார்த்திக் சுப்புராஜ், ப்ளீஸ் எங்களை விட்ருங்க இதற்கு மேல் எங்கள் கதையை எடுக்க வேண்டாம். முக்கியமா நடிகர்களை இலங்கை தமிழ் பேச வைக்க முயற்சிக்காதீங்க என பதிவிட்டுள்ளார்.