இலங்கைத் தமிழ் தம்பதியரின் மகனுக்கு பிரித்தானியாவில் கிடைத்துள்ள உயரிய விருது
இலங்கைத் தமிழ் தம்பதியரின் மகனான கவிஞர் ஒருவருக்கு, பிரித்தானியாவின் உயரிய விருதொன்று வழங்கப்பட்டுள்ளது.
உயரிய விருது பெற்றுள்ள இலங்கைத் தமிழ் தம்பதியரின் மகன்

பிரித்தானியாவின் Leedsஇல் பிறந்து, தற்போது அமெரிக்காவில் வாழ்ந்துவருபவர், வித்யன் ரவீந்திரன் (Vidyan Ravinthiran).
வித்யன் ரவீந்திரன் எழுதிய அவித்யா என்னும் கவிதைத் தொகுப்புக்கு, 2025ஆம் ஆண்டுக்கான, பிரித்தானியாவின் கவிதைகளுக்கான உயரிய விருதான Forward prize என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது.

வித்யன் ரவீந்திரன் எழுதிய அவித்யா என்னும் கவிதைத் தொகுப்பு, மிகப்பெரிய தனிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பயணங்கள் மற்றும், மூன்று வெவ்வேறு நாடுகளுடன் பிணைக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் உணர்விலிருந்து உருவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், முதன்முறையாக இந்த விருதை இரண்டு கவிஞர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள்.
வித்யன் ரவீந்திரனுடன், கனேடிய கவிஞரான கரன் சோலீ (Karen Solie) என்பவரும், தனது Wellwater என்னும் கவிதைத் தொகுப்புக்காக, Forward prize விருதைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

பரிசு பெற்ற கவிஞர்கள் இருவருக்கும், ஆளுக்கு 5,000 பவுண்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்த நடுவர்களில் ஒருவரான லிசா கெல்லி (Lisa Kelly), வெற்றியாளர்கள், நமது காலகட்டத்தின் அவசர சவால்களான பருவநிலை நெருக்கடி, போர் மற்றும் புலம்பெயர்தல் போன்ற விடயங்களை தனிப்பட்ட நுண்ணறிவு மற்றும் தத்துவ ஆழத்துடன் முன்வைத்துள்ளார்கள் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |