மோடியின் முடிவு இதுவே! ஈழத்தமிழர் விடயத்தில் ரணிலின் மாற்று வியூகம்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க-வின் இந்திய சுற்றுப்பயணமானது இரு நாடுகள் இடையே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
13ம் திருத்தச் சட்டம்
இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இந்திய சுற்றுப்பயணத்தின் போது 13ம் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட மாட்டாது என்பதை தந்திரோபாயமாக குறிப்பிட்டு இருப்பதாக கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளால் நிராகரிக்கப்பட்ட ஒன்று இந்த 13ம் திருத்தச் சட்டம் எனவும், தமிழ் மக்களுடைய சுயாட்சி மற்றும் சமஷ்டி முறை ஆகிய கோரிக்கைகளை இந்தியா பெற்றுத் தருவதில் வாய்ப்பானது மிகவும் குறைவு என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார ரீதியான இணக்கப்பாடுகள் மட்டுமே விவாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் வழங்கிய பல முக்கிய தகவல்கள் கீழே உள்ள வீடியோவில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |