இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்! தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உறுதி
தமிழகம் வரும் இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடுமையான பொருளாதார சிக்கல் ஏற்பட்டு மக்கள் அத்தியாவசிய பொருள்களை கூட வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதையடுத்து அங்கு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை, அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்ததை அடுத்து பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடியை தாக்கு பிடிக்க முடியாமல் பல இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்துக்கு படையெடுத்து வரும் சூழல் உருவாகியுள்ளது.
இது தொடர்பாக தமிழக சட்டபேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இலங்கை தமிழர்களுக்கு விடிவு பிறக்கும்.
இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்; அடைக்கலம் தேடி வரும் அவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.