தமிழ் மீது ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இசையால் தமிழ் வளர்க்கும் இலங்கைத் தமிழர்கள்: கனடாவில் ஒரு கலாச்சாரப் புரட்சி
என்னுடைய பாடல்களைக் கேட்கும் பலர், ’நான் தமிழ் கற்றுக்கொள்ள விரும்புகிறேன், ஏனென்றால், அப்போதுதானே உங்கள் பாடல்களை இன்னமும் நன்றாக புரிந்துகொள்ள முடியும்’ என்கிறார்கள் என்று கூறுகிறார் Navz-47 என்று அழைக்கப்படும் Naveeni Philip (நவீனி பிலிப் (31).
அதைவிட பெரிய பாராட்டு இருக்கமுடியாது என்று நான் நினைக்கிறேன் என்று கூறும் நவீனி, இலங்கையில் பிறந்தவர்.
12 வயது இருக்கும்போது கனடாவுக்கு வந்த நவீனி, தான் எந்த நாட்டவள், இலங்கை நாட்டவரா கனடா நாட்டவரா, எது என் தாய்நாடு, என இரண்டுக்கும் நடுவில் தடுமாறிய ஒரு காலகட்டம் இருந்தது என்கிறார்.
இனி வரும் இளைய தலைமுறை அப்படி இருக்கக்கூடாது என நான் விரும்புகிறேன் என்று கூறும் நவீனி, நீங்கள் எங்கிருந்தாலும், உங்கள் சொந்த நாட்டிலிருப்பதாக உணரமுடியும் என்கிறார்.
நவீனி, Amirthegan Wijayanathan (26) போன்ற தெற்காசிய கலைஞர்கள் இசைத்துறைக்குள் காலடி எடுத்து வைக்க உதவியாக ரொரன்றோவில் Maajja என்ற இசைத் தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார் நோயல் கீர்த்திராஜ் (Noel Kirthiraj).
தெற்காசிய கலைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம், சரியான ஆதரவு கிடைத்தால், அவர்கள், மற்ற பிரபல துறைகளைப்போல இசைத்துறையை தாங்கள் பணியாற்றும் துறையாக தேர்ந்தெடுக்கமுடியும் என்று கூறும் Maajjaவை உருவாக்கியவரான கீர்த்திராஜ், தெற்காசிய இசைக்கலைஞர்களும் இசையை உருவாக்கி, அதுவும் மேற்கத்திய இசைக்கு இணையாக வெற்றிகரமாக உலாவருவதைக் காண தான் விரும்புவதாக தெரிவிக்கிறார்.
எங்களைப் பொருத்தவரை, மென்மேலும் தமிழ் மற்றும் தெற்காசியக் கலைஞர்கள் உருவாகி, அவர்கள் உலக மேடையில் உலாவருவதைக் காண்பதற்கான வாய்ப்புகளை நாங்கள் உருவாக்கிக்கொடுக்க விரும்புகிறோம் என்கிறார் அவர்.
புலம்பெயர்ந்தோர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ஒரு காலகட்டத்தில், தங்கள் தாய்மொழியில் இசையைக் கேட்கத் தயக்கம் காட்டியதாக தெரிவிக்கிறார் அவர்.
ஆனால், இப்போது நீண்ட காலமாக நாம் ஒரு சமுதாயமாக வாழ்கிறோம். பல்வேறு கலை, கலாச்சார சூழலில் வாழும் நம் பிள்ளைகள் மற்றும் நண்பர்களுக்கு இப்போது நாம் நமது இசையை அறிமுகம் செய்கிறோம் என்கிறார் கீர்த்திராஜ்.
இசை, உலக மேடையில் வெளிப்படும்போது, அது சாதாரணமான ஒன்று என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. நம் மொழியுடனோ, கலாச்சாரத்துடனோ நேரடித் தொடர்பில்லாதவர்களாகிய, கனடாவில் பிறந்த நமது குழந்தைகளுக்கு, இப்போது, நம் இசை, ஆர்வத்தைத் தூண்டப்போகிறது. அப்போது அவர்கள் நிச்சயமாக தங்கள் மொழி குறித்து தயக்கம் காட்டமாட்டார்கள், தங்கள் உணர்வுகளை தடையின்றி வெளிப்படுத்துவார்கள் என்று நான் கருதுகிறேன் என்கிறார் அவர்.