தகனம் வேண்டாம்! கள்ளக்குறிச்சி மாணவி உடலை புதைக்க திடீர் முடிவு.. காரணம் இதுதான்
ஸ்ரீமதியின் உடலை புதைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி கடந்த ஜூலை 13ம் திகதி பலியானார்.
பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் ஸ்ரீமதியின் உடல் இன்று அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த கிராமத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாணவி உடலை முதலில் தகனம் செய்யவே முடிவு செய்து இருந்தனர். அவரின் மத வழக்கப்படி உடலை தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக அந்த கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.
விறகுகள் வாங்கி ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தது. ஆனால் இன்று காலை அந்த முடிவு கைவிடப்பட்டது. அதன்படி திடீரென உடலை தகனம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை அங்கு ஜெசிபி கொண்டு வரப்பட்டது. ஜெசிபி மூலம் அங்கு குழி தோண்டப்பட்டது. இது தொடர்பாக ஸ்ரீமதியின் உறவினர்கள் கூறுகையில், மதப்படி தகனம் செய்யவே நினைத்தோம்.
ஆனால் எங்களுக்கு இறப்பில் சந்தேகம் உள்ளது. பிரேத பரிசோதனையில் எங்களுக்கு திருப்தி இல்லை. பிரேத பரிசோதனை ரிப்போர்ட் எப்படி வர போகிறது என்று தெரியவில்லை.
ஒருவேளை ரிப்போர்ட் மீது எங்களுக்கு சந்தேகம் இருந்தால் உடலை மீண்டும் பரிசோதனை செய்ய கோரிக்கை வைப்போம். இதற்காக உடலை புதைக்க முடிவு செய்தோம் என கூறியுள்ளனர்.