Wiproவின் CEO ஆகப் போகும் இந்தியர்..யார் இந்த ஸ்ரீனிவாஸ் பாலியா?
விப்ரோ (Wipro) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஸ்ரீனிவாஸ் பாலியா பணியாற்றவுள்ளார்.
பிரபல IT நிறுவனமான விப்ரோ தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி தியரி டெலாபோர்ட் பதவியில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டது.
அத்துடன் மே மாதத்திற்கு பின் புதிய CEO ஆக ஸ்ரீனிவாஸ் பாலியா செயல்படுவார் என தெரிவித்துள்ளது.
யார் இந்த ஸ்ரீனிவாஸ் பாலியா?
அமெரிக்காவின் பாரிய, வேகமாக வளர்ந்து வரும் அமெரிக்காஸ் 1 நிறுவனத்தின் CEO ஆக பணியாற்றிய இந்தியர் ஸ்ரீனிவாஸ் பாலியா.
பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனத்தில் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், 30 ஆண்டுகளுக்கு மேலாக விப்ரோவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
மேலாண்மைப் படிப்பிலும் முதுகலைப் பட்டம் பெற்ற ஸ்ரீனிவாஸ், ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல் மற்றும் மெக்கில் எக்ஸிகியூட்டிவ் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றில் நிர்வாகப் படிப்புகளை முடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி பல்வேறு தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ள ஸ்ரீனிவாஸ், விரிவான நிறுவன மற்றும் தொழில்துறை அறிவு கொண்டவர்.
தலைமைப் பொறுப்புக்கு சரியான தேர்வு
விப்ரோ லிமிடெட் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி தமது நிறுவனத்தின் பயணத்தில் ஸ்ரீனிவாஸ் பாலியாவின் பங்கு குறித்து கூறுகையில், 'வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட அவரது அணுகுமுறை, வளர்ச்சி மனப்பான்மை, செயல்பாடுகளை வலுவாக்குதல் மற்றும் விப்ரோவுடன் அவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பு ஆகிய காரணங்களால் அவர் தலைமைப் பொறுப்புக்கு சரியான தேர்வாகி இருப்பார்' என்றார்.
அதேபோல் CEO நியமனம் குறித்து ஸ்ரீனிவாஸ் பாலியா கூறும்போது, ''விப்ரோ நிறுவனமானது லாபத்தையும், நோக்கத்தையும் இணைத்து செயல்படும் அறிய நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனத்தை வழிநடத்த தேர்வு செய்யப்பட்டதற்கு நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |