1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட கோயில்.., தமிழகத்தில் எங்கு உள்ளது தெரியுமா?
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலும் தனித்துவமான வரலாறும், கட்டிடக் கலை சிறப்பும் கொண்டவை.
பொற்கோயில் என்றால் பலருக்கும் முதலில் நினைவிற்கு வருவது பஞ்சாபில் உள்ள தங்க கோவில்.
ஆனால் தமிழகத்திலும் ஒரு பிரமாண்டமான பொற்கோயில் உள்ளது. அது தமிழக மாவட்டம் வேலூரில் அமைந்துள்ள ஸ்ரீபுரம் பொற்கோயில் ஆகும்.

இந்த கோயில் லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது மகாலட்சுமி கோயில் அல்லது லட்சுமி நாராயணி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த கோயில் 2007ஆம் ஆண்டு ஆன்மீகத் தலைவர் ஸ்ரீ சக்தி அம்மா அவர்களால் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இது ஸ்ரீபுரம் ஆன்மீக பூங்காவின் ஒரு பகுதியாகும்.
ஸ்ரீபுரம் பொற்கோயில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த கோயிலை கட்டி முடிக்க சுமார் 6 ஆண்டுகள் பிடித்தது.
400க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்கள் இந்த கோயில் கட்டுமான பணியில் ஈடுபட்டனர்.
இந்த கோயிலின் முக்கிய சிறப்பு என்னவென்றால், 1,500 கிலோவிற்கும் அதிகமான தூய தங்கம் பயன்படுத்தப்பட்டு கோயில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தங்கம் உருக்கப்பட்டு தங்கத் தகடுகளாக மாற்றி, பின்னர் செப்பு தகடுகளின் மீது பொருத்தப்பட்டுள்ளது.
கோயிலை சுற்றி சுமார் 1.8 கிலோமீட்டர் நீளமுள்ள நட்சத்திர வடிவ நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாதையில் மரங்கள், பூக்கள் மற்றும் பல்வேறு இந்து தெய்வங்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோயிலின் கருவறையில் லட்சுமி தேவியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
மார் 2.5 மீட்டர் உயரம் மற்றும் 70 கிலோ எடை கொண்டதாக கூறப்படும் இந்த சிலை கல்லால் செய்யப்பட்டாலும் தங்கம் மற்றும் விலையுயர்ந்த கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபுரம் பொற்கோயில் தினமும் அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். பக்தர்கள் இலவச தரிசனம், சிறப்பு தரிசனம் மற்றும் விஐபி தரிசனம் மூலம் அம்மனை தரிசிக்கலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |