ஸ்ரீரங்கம் கோயில் பிரசாதம் தித்திக்கும் அக்காரவடிசல்: எப்படி செய்வது?
கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் என்றாலே தனிச்சுவை தான்.
குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களுக்கு தனி பிரியர்களே இருக்கின்றனர்.
அந்தவகையில், ஸ்ரீரங்கம் கோயில் பிரசாதம் அக்காரவடிசல் எப்படி வீட்டிலேயே ஈசியா செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- புது அரிசி- 1 கப்
- பாசிப் பருப்பு- ½ கப்
- பால்- 4 கப்
- நெய்- தேவையான அளவு
- வெல்லம்- 1½ கப்
- ஏலக்காய் பொடி- ¼ ஸ்பூன்
- பச்சை கற்பூரம்- 1 சிட்டிகை
- உப்பு- 1 சிட்டிகை
- முந்திரி- 20
- உலர் திராட்சை- 15
செய்முறை
முதலில் ஒரு குக்கரில் கழுவி சுத்தம் செய்து வைத்த அரிசி மற்றும் பருப்பை சேர்த்து ஊற்றி குக்கரில் நான்கு விசில் விட்டு வேக வைக்கவும்.
அடுத்து அடுப்பில் கடாய் வைத்து இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி குக்கரில் வேக வைத்த சாதத்தை போட்டு பால் சேர்த்து குலைந்து வரும்வரை நன்கு கிளறவும்.
குறைவான தீயில் வைத்து கிளறவும் பின் ஏலக்காய் பொடி, பச்சை கற்பூரம் போட்டு கலந்து விடவும்.
பின்னர் இதில் பவுடர் வெல்லம் சேர்த்து வெல்லம் கரையும்வரை நன்கு கலந்து ஒரு சிட்டிகை உப்பு போட்டு கிளறவும்.
இதைத்தொடர்ந்து இதில் அவ்வப்போது நெய் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
பின் நெய்யில் முந்திரி, திராட்சையை பொறித்து இதில் கொட்டி நன்கு கலந்து அல்வா பதம் வரும்வரை நன்கு கலக்கவும்.
கெட்டியாகி வந்ததும் இறுதியாக நெய் சேர்த்து கிளறி இறக்கினால் ஸ்ரீரங்கம் கோயில் பிரசாதம் அக்காரவடிசல் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |