Fact Check: லதா மங்கேஷ்கர் சடலத்தின் மீது எச்சில் துப்பினாரா ஷாருக்கான்?
இந்தியாவின் பிரபல முன்னணி பாடகி லதா மங்கேஸ்கரின் இறுதிச்சடங்கில் நடிகர் ஷாருக் கான் மற்றும் அவரது உதவியாளர் பூஜா டாட்லணி பிரார்த்தனை செய்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
இந்தியாவின் முன்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இரண்டு வாரங்களுக்கும் மேலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று காலை உயிரிழந்தார்.
இந்த நிலையில் அவருக்கு திரைப்பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
அவரது இறுதி சடங்குகள் மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் ஷாருக் கான் மற்றும் அவரது உதவியாளர் பூஜா டாட்லணி லதா மங்கேஷ்கருக்கு இறுதி மரியாதையை செலுத்தினர்.
அப்போது நடிகர் ஷாருக் கான் தனது மத வழக்கப்படி துவா செய்தும், அவரது உதவியாளர் பூஜா டாட்லணி தனது மத வழக்கப்படி கைகளை கூப்பி லதா மங்கேஸ்கர்க்கு மரியாதையை செய்தனர்.
இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலர் தங்கள் இணைய பக்கத்தில் "இது தான் இந்தியா என்றும் வேற்றுமைகளால் நாங்கள் பிணைந்து இருப்பதாகவும் அதுவே எங்கள் ஒற்றுமை” என குறிப்பிட்டு பகிர்ந்து வருகின்றனர்.
இது பலராலும் பாராட்டப்பட்டு வந்தாலும், ஷாருக்கான் இறுதியில், சடலத்தின் மீது ஊதிய செயலுக்கு சிலர் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.
பாஜக தலைவர் அருண் யாதவ் பதிவிட்டுள்ள ஒரு பதிவில் ஷாருக்கான் தனது முகக்கவசத்தை கழட்டி காற்றை ஊதிய விடியோவை பதிவிட்டு, அவர் ஏன் எச்சில் துப்புகிறார் என்றும் அவர் லதா மாங்கேஸ்வரை அவமரியாதை செய்கிறாரா என்ற தொனியில் பதிவிட்டுள்ளார்.
क्या इसने थूका है ❓ pic.twitter.com/RZOa2NVM5I
— Arun Yadav (@beingarun28) February 6, 2022
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜக தலைவர் பதிவிட்டுள்ள அந்த பதிவிற்கு காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஸ்ரீநாட் பதில் பதிவை இட்டு அதில் அது இஸ்லாம் மதப்படி அது தீயசக்திகளை விரட்டும் செயல்முறை என்று விளக்கி ஏன் இத்தகைய வெறுப்பை உமிழ்கிறீர்கள் என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.
ஷாருக்கான் இறுதி மரியாதை செய்தது பல்வேறு விவாதங்களுக்கு உள்ளனாலும், ஷாருக்கான் மற்றும் அவரது உதவியாளர் பூஜா டாட்லணி செயலுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.