ஹொங்ஹொங்கில் அமெரிக்க உளவாளியை மறைக்க உதவிய இலங்கை அகதிகள் குடும்பம் கனடாவுக்கு குடியேறியது!
ஹொங்ஹொங்கில் அமெரிக்க உளவாளி ஒருவர் பதுங்கியிருக்க 2 வாரங்களுக்கு அடைக்கலம் கொடுத்த இலங்கை அகதிகள் குடும்பம் கனடாவுக்கு குடியேறியது.
கடந்த 5 ஆண்டுகளாக கனடாவில் குடியேற கோரிக்கை வைத்திருந்த நிலையில், இந்த குடும்பத்திற்கு தற்போது கனடா அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அமெரிக்காவில், மத்திய புலனாய்வு முகமைக்கு (CIA) பணியாளராகவும் துணை ஒப்பந்ததாரராகவும் இருந்த எட்வர்ட் ஜோசப் ஸ்னோவ்டென் (Edward Snowden) எனும் முன்னாள் கணினி நுண்ணறிவு ஆலோசகர், 2013-ல் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனத்திடமிருந்து (NSA) மிகவும் ரகசிய தகவல்களை கசியவிட்டார்.
இதற்காக, அவரை அமெரிக்க அரசாங்கம் தேசத்துரோக வழக்கில் தீவிரமாக தேடிவந்தது. அப்போது அவர் உலகம் முழுவதும் தேடப்பட்டுவந்த முக்கிய குற்றவாளியாக இருந்தார்.
அப்போது அவர் ஹொங்ஹொங்கிற்கு தப்பிச் சென்றார். அவர் யார் என்றே தெரியாமல், தஞ்சம் கேட்டு வந்த அவரை, இலங்கை அகதிகளான Supun Kellapatha மற்றும் Nadeeka Kuttige குடும்பத்தினர் கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு அவர் பதுங்கியிருக்க உதவிசெய்தனர்.
PHOTO BY JAYNE RUSSELL
இந்த விவரம் 2016-ஆம் ஆண்டு வெட்டவெளிச்சமானதால், அவர்கள் அந்நாட்டில் தொடர்ந்து இருப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்தான சூழலில் வாழ்ந்துவந்துள்ளார்.
பிறகு வர்களுக்காக வாதாடிய கனேடிய வழக்கறிஞரின் உதவியுடன், கனடாவிற்கு குடியேற அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று (செப்.28) கனடாவிற்கு குடியேறினர். அவர்களுடன், மேலும் சில இலங்கை மற்றும் பிலிப்பினோ அகதிகள் கனடாவிற்கு குடியேறினர்.
PHOTO BY ISAAC LAWRENCE/AFP
Supun Kellapatha மற்றும் Nadeeka Kuttige தம்பதிக்கு Sethmundi எனும் மகளும், Dinath எனும் ஆன் குழந்தையும் உள்ளனர்.
8 ஆண்டுகளுக்கு முன்பு அறியாமல் செய்த தவறுக்காக நிம்மதியை இழந்து 2 குழந்தைகளுடன் கடினமான வாழ்க்கை வாழ்ந்துவந்த இந்த குடும்பத்துக்கு கனடாவில் அமைதியான வாழ்க்கை தொடங்கியுள்ளது.