ஜேர்மனியில் மூன்று பேரை கத்தியால் குத்திக்கொன்ற நபர்... பொதுமக்களின் துணிச்சல் நடவடிக்கை

Germany
By Balamanuvelan Jun 26, 2021 09:30 AM GMT
Report

ஜேர்மனியில் சோமாலிய நாட்டவர் ஒருவர் மூன்று பேரைக் கத்தியால் குத்திக்கொன்றதுடன், ஆறு பேரை காயப்படுத்தியுள்ளார். நேற்று மாலை 5 மணியளவில், பவேரியாவிலுள்ள Wurzburg நகரில், சோமாலி நாட்டவரான ஒருவர் கையில் கத்தி ஒன்றை வைத்துக்கொண்டு வந்தவர்கள் போனவர்கள் எல்லாரையும் தாக்கியுள்ளார்.

இந்த பயங்கர தாக்குதலில் மூன்று பேர் பலியானார்கள், ஆறு பேர் படுகாயமடைந்தார்கள். காயமடைந்தவர்களில் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் பிழைப்பார்களா என்பது குறித்து உறுதியாக கூறமுடியவில்லை என்றும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்ன வென்றால், சம்பவத்துக்கு சாட்சியாக நின்ற பொதுமக்கள், அந்த நபர் கையில் கத்தி இருப்பது தெரிந்தும் அவரை சுற்றி வளைத்துள்ளார்கள்.

நாற்காலி, கம்பு, மொபைல் போன், குடைகள் முதலான பொருட்களை அவர் மீது வீசி, அவரை சுற்றி வளைத்து ஓட விடாமல் செய்த பொதுமக்கள், பொலிசார் வந்த பிறகு அவர்களை அந்த நபருடம் வழிநடத்திய பிறகே ஓய்ந்திருக்கிறார்கள்.


தாக்குதல் நடத்தியவர், 24 வயதான சோமாலி நாட்டவர் என்ற விடயம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அவரது பெயர் முதலான விவரங்கள் வெளியிடப்படவில்லை.

சம்பவத்தைக் கண்ணால் பார்த்த சிலர், அந்த நபர் அல்லாஹூ அக்பர் என கத்தியதாக தெரிவிக்கிறார்கள். ஆனால், அவர் இதற்குமுன் எந்த தீவிரவாத தாக்குதலுடனும் தொடர்புடையவர் என தெரியவரவில்லை என்று பொலிசார் கூறியுள்ளதால் அந்த நபரின் தாக்குதலுக்கான நோக்கம் தெரியவில்லை.

ஆயுதம் தாங்கிய பொலிசார், அந்த நபரை துப்பாக்கியால் காலில் சுட்டுத்தான் பிடிக்க முடிந்திருக்கிறது. காலில் காயத்துடன் கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜேர்மனியில் மூன்று பேரை கத்தியால் குத்திக்கொன்ற நபர்... பொதுமக்களின் துணிச்சல் நடவடிக்கை | Stabbed Three People In Germany

ஜேர்மனியில் மூன்று பேரை கத்தியால் குத்திக்கொன்ற நபர்... பொதுமக்களின் துணிச்சல் நடவடிக்கை | Stabbed Three People In Germany

ஜேர்மனியில் மூன்று பேரை கத்தியால் குத்திக்கொன்ற நபர்... பொதுமக்களின் துணிச்சல் நடவடிக்கை | Stabbed Three People In Germany

ஜேர்மனியில் மூன்று பேரை கத்தியால் குத்திக்கொன்ற நபர்... பொதுமக்களின் துணிச்சல் நடவடிக்கை | Stabbed Three People In Germany



மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US