பிரித்தானிய கிராமம் ஒன்றில் ரத்தக்களரியான சம்பவம்: முதல் புகைப்படத்தை வெளியிட்ட குடும்பம்
பிரித்தானியாவின் Gloucestershire பகுதி அருகாமையில் உள்ள கிராமம் ஒன்றில் கத்தியால் தாக்கப்பட்டதில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் இன்னொருவர் கத்திக்குத்து காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார். Gloucestershire பகுதியின் Tewkesbury கிராமப்பகுதியிலேயே குறித்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதில் 3 பிள்ளைகளின் தந்தையான 43 வயது Matthew Boorman சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார். இன்னொருவர் காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். பெண் ஒருவர் காலில் காயத்துடன் மருத்துவமனையை நாடியுள்ளார்.
பொலிசார் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், சுமார் 5.20 மணியளவில் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தகவல் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மிகவும் அமைதியான குடியிருப்பு பகுதியில் இப்படியான ஒரு கொலைவெறி தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது, அங்குள்ள மக்களை கவலை கொள்ள வைத்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், Matthew Boorman புகைப்படத்தை வெளியிட்ட அவரது குடும்பத்தினர், இத்தனை சீக்கிரம் எங்களை தவிக்கவிட்டு அவர் பிரிந்து செல்வார் என எதிர்பார்க்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.