சற்று முன்... ஜேர்மன் ரயிலில் கத்திக் குத்து தாக்குதல்: பலர் காயம்
இன்று காலை, ஜேர்மன் ரயில் ஒன்றில் கத்திக் குத்து தாக்குதல் ஒன்று நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (சனிக்கிழமை), காலை 9.20 மணியளவில், பவேரியா மாகாணத்தில், Regensburg மற்றும் Nuremberg நகரங்களுக்கிடையே பயணிக்கும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் கத்திக் குத்துத் தாக்குதல் ஒன்று நிகழ்ந்துள்ளதாகவும், அதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
அந்த ரயில் பவேரியாவிலுள்ள Seubersdorf என்ற நகருக்கு அருகே தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
ஜேர்மன் ரயில்வேயின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, இரண்டு நகரங்களையும் இணைக்கும் ரயில் பாதை மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தாக்குதல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தாக்குதலுக்கான காரணம் எதுவும் இப்போது தெரியவரவில்லை.
இது ஒரு சமீபத்தைய செய்தி என்பதால், தாக்குதல் குறித்த மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன...
In Seubersdorf (NM) läuft ein größerer Einsatz.
— Polizei Oberpfalz (@polizeiopf) November 6, 2021
Es besteht aktuell keine Gefahr für die Bevölkerung!
Unserer Einsatzzentrale wurde gegen 9 Uhr mitgeteilt, dass es in einem ICE zu Angriffen auf Fahrgäste kommen soll. Eine männliche Person wurde kurz darauf festgenommen. pic.twitter.com/s9WVZDlX9r