பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி இளைஞர் இருவரின் கொடுஞ்செயல்... பரிதாபமாக பறிபோன உயிர்
இணையமூடாக ஆயுதங்களை வாங்கி, பாடசாலை மாணவன் ஒருவனை பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்த வழக்கில் இளைஞர்கள் இருவருக்கு மொத்தமாக 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
16 வயதேயான ரோனன் கந்தா
வால்வர்ஹாம்ப்டன் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16 வயதேயான ரோனன் கந்தா கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். நண்பர் ஒருவரின் குடியிருப்பில் இருந்து வீட்டுக்கு திரும்பும் வழியிலேயே ரோனன் கந்தா தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
Credit: Met
ஆனால் உண்மையில் அந்த தாக்குதல்தாரிகள் ரோனன் கந்தாவை இலக்கு வைக்கவில்லை எனவும், போதை மருந்து விவகாரத்தில் தங்கள் எதிர்தரப்பு நபர் ஒருவரை கொலை செய்யும் நோக்கில் தாக்குதலை முன்னெடுத்ததாகவே விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.
லிவர்பூல் கால்பந்து அணியின் தீவிர ரசிகரான ரோனன், ஒரு சட்டத்தரணியாக வேண்டும் என்ற கனவில் இருந்தவர். பாடல் கேட்டபடி நடந்து சென்றுகொண்டிருக்கும் போதே, எதிர்பாராத வகையில் கொலைவெறி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
கொலை வழக்கு குற்றவாளிகள்
இந்த வழக்கில் 17 வயதுடைய இந்திய வம்சாவளி பிரப்ஜீத் வேதேசா மற்றும் சுக்மான் ஷெர்ஜில் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு, கொலை வழக்கு குற்றவாளிகள் என மே மாதத்தில் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டனர்.
Image: West Midlands Police
இதனையடுத்து வேதேசாவுக்கு குறைந்தபட்சம் 18 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன், ஷெர்ஜிலுக்கு 16 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.
சிறுவனின் முகம் பார்க்காமல், பின்னால் இருந்து கொடூரமாக தாக்கியுள்ளது கொடூரத்தின் உச்சம் எனவும், இது உண்மையில் கோழைத்தனமான தாக்குதல் என்றே நீதிபதி சௌத்ரி குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |