கனடாவில் ஓடும் ரயிலில் ஒரு கத்திக்குத்து சம்பவம்: பதறியடித்து ஓட்டம் பிடித்த பயணிகள்
கனடாவின் ரொரன்றோ சுரங்க ரயிலில், பட்டப்பகலில் நடந்த கத்திக்குத்து சம்பவம் ஒன்று பயணிகளை பதற்றத்துக்குள்ளாக்கியது.
வெளியான வீடியோ
அந்த சம்பவத்தைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதில், இரண்டு பேர் சண்டையிட்டுக்கொள்வதை தெளிவாக காண முடிகிறது.
இருவருக்குமிடையிலான வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாற, வெள்ளை சட்ட அணிந்தவர் கருப்பினத்தவர் ஒருவரை ஓங்கி மிதிப்பதைக் காணலாம்.
இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ள, திடீரென, வெள்ளை சட்டை அணிந்தவர் இரத்தம் சொட்டச் சொட்ட ஓட, கருப்பினத்தவர் அவரை துரத்திக்கொண்டு ஓட, பதறிய பயணிகளோ எதிர்த்திசையில் ஓடுவதையும் காணலாம்.
பொலிசார் தெரிவித்துள்ள தகவல்
ரயில் நின்றதும், கத்தியால் குத்திய நபர் தப்பியோடியதாக தெரிவித்துள்ள பொலிசார், அவரது அடையாளங்களை வெளியிட்டு அவரைத் தேடி வருவதாக தெரிவித்துள்ளார்கள்.
(Supplied by Toronto Police Service)
இதற்கிடையில், கத்தியால் குத்தப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் முதலில் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், தற்போது அவரது நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Submitted by Saya Sedighi
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பொதுமக்களோ, ஒவ்வொரு நாளும் உயிரைப்பிடித்துக்கொண்டுதான் ரயிலில் பயணிக்கவேண்டியுள்ளது, ரயில் பயணம் அவ்வளவு ஆபத்தானதாகிவிட்டது என்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |