அவர் என்னைக் கொல்லலாம்... கணவர் தொடர்பில் நண்பர்களிடம் உதவி கேட்ட லண்டன் பெண் கொடூர கொலை
லண்டனில் கணவரின் துன்புறுத்தல்களை ரகசியமாக மொபைலில் பதிவு செய்த பெண் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், அந்த கணவனுக்கு தற்போது 21 ஆண்டுகள் சிறைவாசம் விதிக்கப்பட்டுள்ளது.
கணவரால் 36 முறை கத்தியால் தாக்கப்பட்டு
கிழக்கு லண்டனில் Canning Town பகுதியில் 2022 மே மாதம் ஆயிஷா ஹசன் என்பவர் தமது கணவரால் 36 முறை கத்தியால் தாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். ஆனால் தமது மனைவியை ஆழமாக காயப்படுத்த வேண்டும் என தாம் நினைக்கவில்லை என 33 வயதான அசிம் ஹசன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
Image: Metropolitan Police
இருப்பினும், அவர் கொலை குற்றவாளி என நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், அசிம் ஹசனுக்கு குறிந்தபட்சம் 21 ஆண்டுகள் என ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பண விவகாரத்திலேயே இந்த தம்பதி அதிகமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது. மட்டுமின்றி, தமது மனைவிக்கு இன்னொரு நபருடன் தொடர்பு இருப்பதாகவும் அசிம் ஹசன் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்துள்ளார்.
தமது கணவரால் தமக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என அஞ்சிய ஆயிஷா, தமது மொபைலில் ரகசியமாக அனைத்தையும் பதிவு செய்து வந்துள்ளார். அத்துடன், தமது நெருங்கிய நண்பர்களுக்கு அந்த பதிவுகளை அனுப்பி உதவியும் கோரியுள்ளார்.
தமது மனைவியை கொலை செய்துள்ளதாக
ஆயிஷா கொல்லப்படுவதற்கும் 11 நாட்கள் முன்னர் அசிம் ஹசன் தமது மனைவியிடம் கொடூரமாக நடந்துகொண்டுள்ளார். மே 9ம் திகதி, தமது நண்பர்களுக்கு அனுப்பிய குறுந்தகவலில், தாம் கொல்லப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆயிஷா குறிப்பிட்டுள்ளார்.
Image: Metropolitan Police
இவர்களின் விவகாரம் தொடர்பில் அண்டை வீட்டார் ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்தும், அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. இந்த நிலையில் மே 19ம் திகதி பகல் 999 இலக்கத்திற்கு தொடர்புகொண்ட அசிம் ஹசன், தமது மனைவியை கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆயிஷாவின் உடல் முழுவதும் 36 இடங்களில் காயங்கள் காணப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் மற்றும் அவசர மருத்துவ உதவிக் குழுவினர், ரத்தவெள்ளத்தில் வீட்டின் சமையல் அறையில் ஆயிஷாவின் சடலம் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |