நடித்துக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்த கலைஞர்.. அடுத்து நிகழ்ந்த விபரீதம்.. அதிர்ச்சி வீடியோ
மேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்த நாடக கலைஞர்
சிவன் வேடத்தில் நின்றிருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்த ராம் பிரசாத்
இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசத்தில் நாடக கலைஞர் ஒருவர், திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஜான்பூரில் ராம்லீலா நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ராம் பிரசாத் என்பவர் சிவன் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார். இதனால் பதறிப் போன சக கலைஞர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராம் பிரசாத் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
आरती के दौरान अचानक मंच पर गिर पड़ा शख्स | Unseen India pic.twitter.com/M8wdUhu1NF
— UnSeen India (@USIndia_) October 11, 2022