நடிகர் ரகுமான் மகள் திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு! என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா?
சென்னையில் நடந்த நடிகர் ரகுமான் திருமணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் ரகுமானுக்கு இரண்டு மகள்கள். அதில் மூத்த மகளான ருஸ்தாவுக்கும், அல்தாஃப் நவாப் என்பவருக்கும் சென்னையில் திருமணம் நடந்தது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு பசுமைக் கூடை மரக்கன்றுகளை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கலந்துகொண்டார்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலினுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத்தினர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.