மனைவி சடலத்தை பார்த்து கதறி அழுத ஓ.பி.எஸ்! நேரில் சென்று ஆறுதல் கூறி தேற்றிய முதல்வர் மு.க ஸ்டாலின்... நெகிழ்ச்சி புகைப்படங்கள்
மாரடைப்பால் மரணமடைந்த ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி (63)கடந்த இரு வாரங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சென்னை, பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
விஜயலட்சுமியை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் விஜயலட்சுமி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் மனைவியை இழந்து வாடும் ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆறுதல் கூறினார், ஸ்டாலினிடம் கண்ணீர் விட்டு ஓபிஎஸ் அழுத நிலையில் அவரை தேற்றினார்.
அதே போல ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்ற எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு அதிமுக எம்..எல்.ஏக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.