முதலமைச்சர் தாயார் தயாளு அம்மாளுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
தமிழ்நாடு முதலமைச்சர் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தாயார் தயாளு அம்மாள் வயது மூப்பின் காரணமாக இன்று இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள முன்னணி தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயார் தயாளு அம்மாளின் உடல் நலம் குறித்து அறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.
மேலும், திமுக மூத்த தலைவர்களான துரைமுருகன், ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் மருத்துவமனைக்கு சென்று தயாளு அம்மாளின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |