இளையராஜாவிற்கு அரசு சார்பில் பாராட்டு விழா - திகதியை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்
தமிழக அரசு சார்பில் இளையராஜாவிற்கு பாராட்டு விழா நடத்த உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இளையராஜா
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில், கடந்த மார்ச் 8 ஆம் திகதி தனது முதல் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்விற்கு செல்வதற்கு முன்னர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இசைஞானி இளையராஜாவின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
இளையராஜா லண்டனில் சிம்போனி அரங்கேற்றத்தை முடித்து விட்டு, தமிழ்நாடு திரும்பிய போது அவருக்கு விமான நிலையத்திலே தமிழக அரசு சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.
ஜூன் 2 ஆம் திகதி பாராட்டு விழா
சென்னை திரும்பிய அவர், முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அப்பொழுதே, இளையராஜாவிற்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தில் "இளையராஜாவின் திரை இசைப் பயணத்தின் 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி வருகிற ஜூன் 2 ஆம் திகதி சென்னையில் அரசு சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படும்" என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஜூன் 3 ஆம் திகதி பிறந்த இளையராஜா, அன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பதால், ஜூன் 2 ஆம் திகதி தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |