சுவிட்சர்லாந்தில் இனி இது குற்றம்: அறிமுகமாக இருக்கும் சட்டம்
ஒருவரை நேரடியாகவோ அல்லது தொலைபேசி, சமூக ஊடகம் வாயிலாகவோ தொடர்ந்து தொல்லை கொடுத்தல், இனி குற்றம் என சுவிட்சர்லாந்து சட்டம் கொண்டுவர உள்ளது.
சுவிட்சர்லாந்தில் இனி இது குற்றம்
ஒருவரை நேரடியாகவோ அல்லது தொலைபேசி, சமூக ஊடகம் வாயிலாகவோ தொடர்ந்து தொல்லை கொடுத்தல், Stalking என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், Stalking ஒரு குற்றம் என்னும் வகையில் சட்டம் ஒன்றைக் கொண்டுவர சுவிட்சர்லாந்து திட்டமிட்டுவருகிறது.
இந்த stalking, மனோரீதியாகவும், உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரான Céline Vara.
குறிப்பாக, பெண்கள், பதின்மவயதினர் மற்றும் சிறுவர் சிறுமியர் இந்த stalking பிரச்சினையால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்னும் வாதம் நாடாளுமன்றம் முன்வைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் இந்த stalking மசோதாவுக்கு ஒப்புதலளித்தபின் மசோதா சட்டமாக்கப்பட உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |