ஒரே நாளில் இரண்டு முறை மறையும் சிவன் கோயில் : கிடைக்கும் எண்ணற்ற அற்புத பலன்
குஜராத்தில் 150 ஆண்டுகள் பழமையான இந்த சிவன் கோவில் ஒரு நாளில் மாத்திரம் இரண்டு முறைகளாவது மறைந்து மீண்டும் தோன்றுமாம்.
மறையும் சிவன் கோயில்
பொதுவாகவே இந்தியாவில் இருக்கும் கோயில்களானது பக்தியை தாண்டி, அதிசயங்களையும் மர்மங்கள் பலவற்றையும் தன்னுள் தாங்கி நிற்கும்.
அதை பற்றி உண்மையில் அறியும் பொழுது தான் ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் இருக்கும். அந்தவகையில் இக்கோயிலானது 150 ஆண்டுகள் பழமையான கோயிலாகும்.
இது இந்தியாவில் உள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பழமையான கோயில்களில் ஒன்றாகும்.
இது குஜராத்தின் ஜம்புசாரில் கவி கபோய் என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது. அரபிக்கடலுக்கும் கேம்பே விரிகுடாவிற்கும் இடையில், ரையிலிருந்து சில மீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது.
இது இந்தியாவின் மிக முக்கியமான மத தளங்களில் ஒன்றாகும். ஏனென்றால் கந்த புராணத்தில் இந்தக் கோயிலைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவில் காணாமல் போவது ஏன்?
குஜராத் கடற்கரையிலிருந்து சில மீட்டர் தொலைவில் ஸ்தம்பேஷ்வர் கோவில் அமைந்துள்ளது. அதிக அலையின் போது, கோயில் நீருக்கடியில் மூழ்கி, குறைந்த அலையின் போது மீண்டும் தோன்றுகிறது.
ஒரு நாளைக்கு இரண்டு முறை கடல் மட்டம் உயர்ந்து குறைவதால், கோயில் தண்ணீருக்கு அடியில் மறைந்து மீண்டும் தோன்றுகிறது.
கருவறை நீருக்கடியில் முற்றிலும் மூழ்கி அதன் நுனி மட்டும் நீர் மட்டத்திற்கு மேல் தென்படுமாம்.
குறைவான அலைகள் இருக்கும் சமயங்களில் பக்தர்கள் கோயிலுக்குச் சென்று சுவாமியை தரிசனம் செய்யலாம்.
இக்கோயில் எப்படி உருவானது?
சிவபெருமானிடம் தாரகாசுரன் எனும் அசுரன் சிவபெருமானின் மகனைத் தவிர வேறு யாராலும் தன்னை கொல்ல முடியாது என்ற வரத்தை தவமிருந்து பெற்றார்.
இந்த ஆணவத்தினால் தாரகாசுரன் மூன்று உலகிலும் நிறைய அழிவுகளை ஏற்படுத்தினான். எனவே சிவபெருமான் தன்னுடைய நெற்றிக்கண்ணில் இருந்து முருகப்பெருமானை உருவாக்கினார்.
முருகன் பிறந்து, ஆறு வயதாகியவுடன் தாரகாசுரனின் மார்பில் ஈட்டியைத் துளைத்து அவனை வதம் செய்தார்.
இதை அனைத்து தேவர்களும் கொண்டாடினார்கள். ஆனால் முருகப்பெருமான் மட்டும் வருத்தமடைந்துள்ளார். அசுரன் சிவபெருமானின் பக்தனாக இருந்ததால் தாரகாசுரனைக் கொன்றதற்காக வருந்தி, பாவத்திற்கு பரிகாரத்தை தேடினார்.
எனவே விஷ்ணு பகவான் சிவலிங்கங்களை ஸ்தாபனை செய்து பக்தியுடன் வணங்குமாறு முருகப்பெருமானிடம் கூறியுள்ளார்.
அவ்வாறு முருகனால் வைக்கப்பட்ட சிவலிங்கம் தான் அக்கோயிலில் வீற்றிருக்கும் சிவலிங்கம். இதன் மூலம், கார்த்திகேயர் தனது பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.
மேலும் இந்த அதிசய நிகழ்வை காண்பதற்காகவும், சிவபெருமானை தரிசிப்பதற்காகவும் உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை தந்து தரிசனத் செய்துவிட்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |