சொந்த நாட்டிலேயே அந்நியர்கள் போல் உணரும் பிரித்தானியர்கள்
புலம்பெயர்தலைக் காரணம் காட்டி, பிரித்தானியர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அந்நியர்களாக உணர்வதாக தெரிவித்திருந்தார் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்.
இந்நிலையில், அப்படி பிரித்தானியர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அந்நியர்களாக உணர்வது உண்மைதான் என்கிறது சமீபத்திய ஆய்வொன்று.
ஆனால், அதற்குக் காரணம் புலம்பெயர்தல் அல்ல, வேறொரு விடயம் என்கிறது அந்த ஆய்வு!
சொந்த நாட்டிலேயே அந்நியர்கள்...
[
அதாவது, பிரித்தானியாவில் வாழும் பிரித்தானியர்கள் பலர், ஏழ்மை காரணமாக சொந்த நாட்டிலேயே அந்நியர்களாக உணர்கின்றனர் என்கிறது More In Common என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வு.
ஆய்வில் பங்கேற்ற 13,464 பிரித்தானியர்களில் பலர், ஏழ்மை, தங்களை தங்கள் சொந்த நாட்டிலேயே அந்நியர்களாக உணரவைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Runcornஐச் சேர்ந்த, ஆசிரியையாக பணியாற்றும் ஏமி என்னும் ஒரு பெண், வாங்கும் சம்பளம் மின்சாரம், எரிவாயு போன்ற கட்டணங்களுக்கும், உணவு, எரிவாயு போன்ற பொருட்களுக்குமே செலவாகிவிடுகிறது. நமக்காக செலவிட எதுவுமே மிஞ்சுவதில்லை என்கிறார்.
மேலும், அரசு பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக தாங்கள் கருதுவதாக பலர் தெரிவித்துள்ளனர். என்றாலும், இந்த கருத்து ஒருவரது கல்வியின் அளவைப் பொருத்து மாறுபடுகிறது.
மேலும், கன்சர்வேட்டிவ் மற்றும் ரீஃபார்ம் கட்சிகளுக்கு ஆதரவளித்த மக்களும், தாங்கள் தற்போது பிரித்தானியாவில் அந்நியர்களாக உணர்வதாக தெரிவித்துள்ளனர்.
ஆக, பிரதமர் கூறியதுபோல, பிரித்தானியர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே தாங்கள் அந்நியர்களாக உணர்வதற்குக் காரணம், புலம்பெயர்தல் மட்டுமல்ல, வேறு பல காரணங்களும் உள்ளன என்கின்றனர் ஆய்வை மேற்கொண்ட More in Common அமைப்பினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |