வட அட்லாண்டிக் பகுதிக்கு போர்க்கப்பல்களை அனுப்பும் பிரித்தானியா: பிரதமர் அறிவிப்பு
பிரித்தானியா வட அட்லாண்டிக் மற்றும் ஆர்ட்டிக் பகுதிகளுக்கு போர்க்கப்பல்களை அனுப்ப இருப்பதாக பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
வட அட்லாண்டிக் பகுதிக்கு போர்க்கப்பல்கள்
வட் அட்லாண்டிக் மற்றும் உயர் வட பகுதி என அழைக்கப்படும் ஆர்ட்டிக் பகுதிகளுக்கு HMS Prince of Wales என்னும் விமானம் தாங்கிக் கப்பல் தலைமையில் போர்க்கப்பல்களை அனுப்ப இருப்பதாக பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

அந்த பகுதியில், ரஷ்யா மற்றும் சீனாவால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகரித்துவரும் நிலையில், டென்மார்க்குக்கு சொந்தமான கிரீன்லாந்தை கைப்பற்றப்போவதாக ட்ரம்பும் மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பேசும்போது இந்த அறிவிப்பை வெளியிட்டார் ஸ்டார்மர்.

மேலும், ஐரோப்பா இல்லாமல் பிரித்தானிய பாதுகாப்பு இல்லை என்றும், பிரித்தானியா இல்லாமல் ஐரோப்பிய பாதுகாப்பு இல்லை என்றும் தான் உறுதிபட நம்புவதாகவும், பிரித்தானியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், நேட்டோ உறுப்பு நாடொன்றின் மீதான தாக்குதல் அனைத்து உறுப்பு நாடுகள் மீதான தாக்குதல் என்னும் அடிப்படை கொள்கையின்படி, நேட்டோவுக்கு அளித்துள்ள உறுதிமொழியை பிரித்தானியா கௌரவிக்கும் என்றும் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |